மாநில செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் அஞ்சலி + "||" + family members pays tributes to karunainidhi memorial

கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தில் மு.க ஸ்டாலின், மு.க அழகிரி உள்பட அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல்  முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், இரவு 7.40 மணியளவில், கருணாநிதி குடும்பத்தினர், அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினர். மு.க ஸ்டாலின், மு.க அழகிரி, கனிமொழி, உதயநிதி, உள்பட கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கொட்டும் மழைக்கிடையே, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.