தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் + "||" + Maharashtra government employees end strike on third day

மராட்டியத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

மராட்டியத்தில் அரசு ஊழியர்களின்  வேலை நிறுத்தம் வாபஸ்
மராட்டியத்தில், 7-வது ஊதிய கமிஷன் அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
மும்பை,


மராட்டியத்தில் 7-வது ஊதிய கமிஷன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கவேண்டும், ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் பணி, காலியாக உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

அறிவித்தபடி நேற்று அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 17 லட்சம் பேர் பங்கேற்று உள்ளதாக தெரிவிக்கப் பட்டன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்து இருந்தது. 

இரண்டரை நாட்களாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர், தலைமைச்செயலாளரை இன்று சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்தம்
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தாம்பரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மராட்டியத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல்
மராட்டியத்தில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. கிலோ 51 பைசா : வெங்காயம் விற்ற பணத்தை முதல்வருக்கு அனுப்பிய விவசாயி!
விவசாய விளைப்பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததை வெளிப்படுத்தும் விதமாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
5. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.