மாநில செய்திகள்

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி : தமிழக அரசு + "||" + TN Government offers to help to rain hit kerala

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி : தமிழக அரசு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி : தமிழக அரசு
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்கப்படும் எனவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பரவலாக மழை
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2. கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
3. வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் : கேரள அரசு
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
4. மதுரை மாவட்டத்தில் கன மழை: கண்மாயில் கட்டிய மாடுகளை மீட்க சென்ற பெண் மூழ்கி சாவு
மதுரை மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது. உசிலம்பட்டி அருகே கண்மாய்க்குள் கட்டிப்போட்டிருந்த மாடுகளை மீட்கச் சென்ற பெண் மூழ்கி பலியானார்.
5. கனமழை எச்சரிக்கை எதிரொலி; அரசு ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக புதுவையில் அரசு ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.