தேசிய செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று அமெரிக்கா பயணம் + "||" + Manohar Parrikar to fly to US for medical treatment on August 10

மருத்துவ சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று அமெரிக்கா பயணம்

மருத்துவ சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று அமெரிக்கா பயணம்
மருத்துவ சிகிச்சைக்காக கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று அமெரிக்கா செல்கிறார்.
பானஜி,

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார்.  இது குறித்து  முதல்வர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:- பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக ஆகஸ்ட் 10 (இன்று) தேதி அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக்கொண்டு வரும் 17 ஆம் தேதி இந்தியா திரும்பி வரவிருக்கிறார். 

பாரிக்கர் கோவாவிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை (நேற்று) இரவு மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் என்று கூறினர். கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள மார்ச் - 7ல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஜூன் 14-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.