தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் + "||" + On last day of Monsoon Session, triple talaq bill to be tabled in Rajya Sabha

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்

மாநிலங்களவையில் இன்று  முத்தலாக் மசோதா தாக்கல்
மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி,

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம்’, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறி விட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. முஸ்லிம் ஆண்களுக்கு விரோதமான அம்சங்கள் இருப்பதாக கூறி, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்றும், முஸ்லிம் ஆண்களின் அச்சத்தை போக்கும்வகையிலும், அந்த மசோதாவில் 3 திருத்தங்கள் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

‘முத்தலாக்’ விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு ஜாமீன் கிடையாது என்று முன்பு இருந்தது. தற்போது, மனைவியின் கருத்தை கேட்ட பிறகு, ஜாமீன் வழங்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மனைவிக்கு இழப்பீடு வழங்க கணவர் சம்மதித்த பிறகு, மாஜிஸ்திரேட்டு ஜாமீன் வழங்கலாம்.
‘முத்தலாக்’ விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஆண் மீது, பக்கத்து வீட்டுக்காரர் கூட புகார் கொடுக்க முடியும் என்று முன்பு இருந்தது. இனிமேல், பாதிக்கப்பட்ட மனைவியோ, அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களோ கொடுக்கும் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதியப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கணவன்–மனைவி இடையே சமரசம் செய்து வைக்க மாஜிஸ்திரேட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று மூன்றாவது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ‘முத்தலாக்’ முறை சட்ட விரோதமானதாக நீடிக்கும். இந்த திருத்தங்களுடன், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால், இந்த மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளும் பாஜக அரசு வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும்  மக்களைவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றம் - பிரதமர் மோடி மகிழ்ச்சி
பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் குறித்து, பிரதமர் மோடி டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
2. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ஜன.2 ஆம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஜனவரி 2-ம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
3. முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்ட அவசரச் சட்டம் சிவசேனா வலியுறுத்தல்
முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
4. கேரள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கொச்சி வந்தார் பிரதமர் மோடி
கேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி கொச்சி வந்துள்ளார். #KeralaFloods
5. மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை
மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்து வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.