தேசிய செய்திகள்

கேரள மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது + "||" + Death toll due to flooding and landslides following heavy and incessant rains in the state rises to 26.

கேரள மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது

கேரள மழை பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது
கேரளாவில் கன மழை பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது, நிலமை மோசமாக உள்ளதாக முதல்வர் கூறி உள்ளார். #keralarains
திருவனந்தபுரம்

கேரளாவில் தொடர்நது கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளா-கர்நாடக எல்லை பகுதியில் தொடர்நது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்த 10 ஆயிரம் பேர் 157 முகாம்களில் தங்கவைக்கபட்டு  உள்ளனர்.

முதல்வர் பிரனராய் விஜயன் கோரிக்கையை ஏற்று இடுக்கி வயநாடு பகுதிகளில் ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது.

முதல்வருடன் பேசிய பிரதமர் மோடி தேவையான உதவி வழங்கப்படும் என கூறி  உள்ளார்
  
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என  கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறி உள்ளார்.


src=hash&ref_src=twsrc%5Etfw">#Kerala pic.twitter.com/2CqWjkn0no

 

— ANI (@ANI) August 9, 2018


தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ 10,000 - கேரள அரசு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ரூ. 10,000 கேரள அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods2018
2. கேரள மழை வெள்ளத்தில் கத்தி முனையில் மிரட்டி மீட்கபட்ட மக்கள்
கேரளாவில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள், தங்கள் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததால், அவர்கள் அனைவரையும் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்தது
நேற்று இரவு வரை கேரள முதல்வர் பிரனராயி விஜயன் நிவாரண நிதிக்கு ரூ.539 கோடி சேர்ந்து உள்ளது. #Keralafloods2018
4. கேரளா மழை வெள்ளம் மழையின் கோரத்தை அம்பலப்படுத்திய நாசா செயற்கைக் கோள் படங்கள்
கேரளம் மற்றும் கர்நாடகத்தில் வெள்ளம் எத்தகைய தீவிரமாகியிருந்தது என்பதை நாசா செயற்கைக் கோள் படங்கள் விவரத்தி உள்ளது. #NASA #KeralaFloods2018
5. கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள்
கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாக ஆணையர் கூறி உள்ளார்.