தேசிய செய்திகள்

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா நியமனம் + "||" + Rekha Sharma Is New National Commission for Women Chairperson

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா நியமனம்

தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக ரேகா சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.#RekhaSharma
புதுடெல்லி,

தேசிய மகளிர் ஆணைய தலைவராக இருந்த வந்த லலிதா குமாரமங்களம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இந்தநிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வந்த ரேகா சர்மா (வயது 54)  கூடுதலாக இந்த பொறுப்பை வகித்து வந்தார். இந்தநிலையில் நேற்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ரேகா சர்மா கூறியதாவது:

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது கவுரமாக கருதுகிறேன்.  கடமை உணர்வுடன் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். பெண்களுக்கு அரசியல் அமைப்பில் உள்ள சட்ட உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் குறைகளை சரி செய்ய உதவுதற்கு  தேசிய மகளிர் ஆணையம்  உண்மையாக செயல்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

பாவ மன்னிப்பு பெண்களை மட்டும் பாதிக்காது ஆண்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். எனவே, பாவ மன்னிப்பு கேட்கும் முறையை சர்ச்சில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என ரேகா சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.