மாநில செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து 1.43 லட்சம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது + "||" + From Karnataka Dams 1.43 lakh cubic feet water opening The Mettur dam reinves the dam

கர்நாடக அணைகளில் இருந்து 1.43 லட்சம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது

கர்நாடக அணைகளில் இருந்து  1.43 லட்சம் கன அடி நீர் திறப்பு மேட்டூர் அணை மீண்டும்  நிரம்புகிறது
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,43,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது இதனால் மேட்டூர் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது. #Metturdam
பெங்களூர்: 

காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.43 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கபினியிலுருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை தாண்டியுள்ளது. நாளை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது.

பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 60,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்களை இயக்க 33-வது நாளாக தடை நீடிக்கிறது