தேசிய செய்திகள்

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி கோரிக்கை + "||" + DMK seeks Bharat Ratna award for Karunanidh

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி கோரிக்கை

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி கோரிக்கை
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். #BharatRatna #Karunanidhi
புதுடெல்லி,

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா  நினைவிடம் அருகே  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல்
கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2. கருணாநிதிக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் - ஆர்.எஸ்.பாரதி எம்.பி.
கருணாநிதி இறந்த பிறகு அவருக்கு இடமில்லை என்றவர்களின் ஆட்சியை விரட்டியடிப்போம் எனபேரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
3. ஜூன் 3–ந்தேதி கருணாநிதியின் பிறந்த நாள் தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3–ந்தேதி தமிழ் செம்மொழி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளார்.
4. மதுரையில் அண்ணா பஸ் நிலையம் அருகே கருணாநிதிக்கு சிலை - மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக மு.க.அழகிரி கூறியுள்ளார்.
5. ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் - நாராயணசாமி
ராஜீவ்காந்தி சிலை முதல் இந்திராகாந்தி சிலை வரை உள்ள சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.