தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் + "||" + In the parliament premises Including Sonia Gandhi Opposition MPs protest

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
விவசாயக் கடன் தள்ளுபடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். #SoniaGandhi
புதுடெல்லி

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா 2016–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.  இது குறித்த தகவல்களை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால், இது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒப்பந்தம் என்பதால் இதுபற்றி தெரிவிக்க முடியாது என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்தார்.

இப்பிரச்சினையை  நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எழுப்பிய ராகுல்காந்தி, டெல்லியில் நான் பிரான்ஸ் அதிபர் மேக்ரனை சந்தித்தபோது, அவர் ரஃபேல் ஒப்பந்தம் ரகசியமான ஒன்று அல்ல என்று என்னிடம் சொன்னார். எனவே, நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி கூறுவது முற்றிலும் தவறானது என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். 

இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2008-ல் நடந்த பாதுகாப்பு உடன்படிக்கையின்படி ரகசியங்களை பாதுகாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது, அதன்படி ரகசிய தகவல்களை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயக் கடன் தள்ளுபடி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி பாராளுமன்ற வளாகத்தில் இன்று சோனியாகாந்தி தலைமையில் எதிர்கட்சி  எம்பிக்கள்  போராட்டம் நடத்தினர். 

முத்தலாக் சட்டத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும்  தெளிவாக உள்ளது, இதை மேலும் நான் கூறமாட்டேன் என  சோனியா காந்தி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா பேட்டி
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.
2. ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது, சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ரபேல் போர் விமானம் வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானது தான் என கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #RafaleDeal
3. 5 மாநில தேர்தல் முடிவுகள்: ‘பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலையும் மீறி கிடைத்த வெற்றி’ சோனியாகாந்தி மகிழ்ச்சி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.
4. “ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தொடங்கினால், பிரதமர் மோடி தப்பிக்க முடியாது” ராகுல் காந்தி உறுதி
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை தொடங்கினால் பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுப்பு
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை இணைக்க இந்திய அரசு தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டது என்பதற்கு பிரான்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.