தேசிய செய்திகள்

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர்கள் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்பு + "||" + In Aarushi Murder, Top Court Admits CBI Appeal Against Parents' Acquittal

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர்கள் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்பு

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர்கள் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்பு
ஆருஷி கொலை வழக்கில் இருந்து பெற்றோர்கள் விடுதலையை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கில் இருந்து, சிறுமியியின் பெற்றோரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது. இந்த கொலை வழக்கில், ஆருஷியின் பெற்றோர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல், தல்வார் தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருஷி கொலை வழக்கின் பிண்ணனி

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள நொய்டாவின் மருத்துவத் தம்பதிகள் டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார். இவர்களது ஜல்வாயு விஹார் வீட்டில் 2008 மே 13-ல் இவர்களது ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த நொய்டா போலீஸ், முறையாக விசாரிக்காமல் அவரது வீட்டு வேலைக்காரனான ஹேமராஜ் எனும் நேபாளிதான் கொலையாளி எனவும், அவரை தேடி வருவதாகவும் அவசரக் கோலத்தில் அறிவித்தது. மறுநாள், தல்வார் வீட்டின் மேல் மாடிக் கதவை திறந்து பார்த்தபோது அங்கு ஹேமராஜ் இரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் நடந்த இரவில் தனது மனைவி நுபுர் தல்வாருடன் ராஜேஷ் வீட்டில் இருந்ததால், உ.பி. போலீசாரின் அடுத்த சந்தேகம் அவர் மீது திரும்பியது. இவருடன் பணியாற்றும் மற்றொரு மருத்துவரும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான அனிதா துரானிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மகள் ஆருஷி எதிர்த்ததால் கொலை செய்யப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மே 23, 2008-ல் ராஜேஷ் தல்வார்தான் அவரது மகள் ஆருஷியைக் கொன்றார் என கைது செய்து செய்யப்பட்டார். பின்னர் 50 நாட்களுக்கு பின் ஜாமீன் பெற்றார். அதன் பிறகு ஜூன் 1, 2008-ல் சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா, பக்கத்து வீட்டு வேலைக்காரன் ராஜ்குமார் மற்றும் இவரது நண்பன் விஜய் மண்டல் ஆகியோர் ஜூன் 13-ல் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தல்வார் தம்பதிகளுக்கும் இந்த சோதனை 2 முறை நடத்தப்பட்டது. இதிலும் சிபிஐக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து காஸியாபாத் சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் தல்வாரிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டது.அதைத் தொடர்ந்த விசாரணையின் முடிவில் காஸியாபாத் சிறப்பு சிபிஐ நீதிமன்றம், தல்வார் தம்பதிக்கு நவம்பர் 25, 2013-ல் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்து வந்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்துள்ளது.உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.மிஸ்ரா மற்றும் பி.கே.நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''சிறுமி ஆருஷி மற்றும் பணியாளர் ஹேம்ராஜை தல்வார் தம்பதியினர்தான் கொலை செய்தனர் என்பதை சிபிஐ நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்ததற்கான ஆதாரங்களும் சரியாக இல்லை. இதனால் சந்தேகத்தின் பலனை தல்வார் தம்பதிக்கு அளித்து அவர்களை விடுதலை செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது.



தொடர்புடைய செய்திகள்

1. முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - பொன்னையன்
முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
2. குஜராத் தொழில் அதிபர் தொடர்பாக தகவல் தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம் சிபிஐ கோரிக்கை
குஜராத் தொழில் அதிபர் தொடர்பாக தகவல் தெரிவிக்க நைஜீரியா இன்டர்போலிடம் இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் - சிபிஐ
பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சிறுமிகளின் அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் விவகாரம், சிபிஐக்கு காங்கிரஸ் கேள்வி
விஜய் மல்லையா மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்ததில்லை என்று சிபிஐ இப்போது எப்படி கூறலாம் என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது.
5. விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #ArunJaitley