தேசிய செய்திகள்

அ.தி.மு.க கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்- கே.சி பழனிசாமி வழக்கு + "||" + Changes in the ADMK Party Rules Need to cancel KC Palanisamy case

அ.தி.மு.க கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்- கே.சி பழனிசாமி வழக்கு

அ.தி.மு.க கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும்- கே.சி பழனிசாமி வழக்கு
எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் கே.சி பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார். #KCPalanisamy #EdappadiPalaniswami #O_Panneerselvam
புதுடெல்லி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை எனில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி பழனிசாமி தெரிவித்திருந்தார்.  இதை தொடர்ந்து  கே.சி. பழனிச்சாமி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார் என அதிமுக தெரிவித்தது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி.கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு  ஒன்று தொடுத்து உள்ளார். அதில் 

"அதிமுக பொதுச் செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்". எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் . 

இருவரும் இணைந்து கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்கம் செய்ய எடுத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்" என கூறி உள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.