மாநில செய்திகள்

திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு + "||" + Dmk executive meeting held at 14

திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
திமுக செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
சென்னை, 

திமுக செயற்குழு கூட்டம் வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில்  மு.க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும், கூட்டத்தில் திமுக செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது என்பதால், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.