தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு: தமிழகத்துக்கு இனி 3 விருதுகளுக்கு மட்டுமே வாய்ப்பு + "||" + Reduction of National Award for Teachers

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு: தமிழகத்துக்கு இனி 3 விருதுகளுக்கு மட்டுமே வாய்ப்பு

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை  குறைப்பு: தமிழகத்துக்கு இனி  3 விருதுகளுக்கு மட்டுமே வாய்ப்பு
ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. #Teachers
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., 5ல், தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இந்தநிலையில்  தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது.  இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 விருதுகளுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்படுவதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.   தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமே விண்ணப்ப முடியும். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது. 

விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வகுப்புகளுக்கு ஒருநாள் கூட தவறாமல் சென்றிருக்க வேண்டும். மேலும் ஆதார்' எண் கட்டாயம் இருக்க வேண்டும். ஆதார் இல்லாதவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கவே முடியாது.  

இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.