தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை: தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயார் ராஜ்நாத் சிங் பேட்டி + "||" + f he needs any other assistance he will inform me: Union Home Minister Rajnath Singh

கேரளாவில் கனமழை: தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயார் ராஜ்நாத் சிங் பேட்டி

கேரளாவில் கனமழை:  தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயார் ராஜ்நாத் சிங் பேட்டி
கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh #KeralaFloods
புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.

இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கினர். இவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலத்தில் மலப்புரம், கோழிக்கோடு வயநாடு, இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 24 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நிலச்சரிவால் பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. 

இடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி 1981–ம் ஆண்டும், 1992–ம் ஆண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய விடுக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியார்களிடம் கூறியதாவது:

கேரளாவில் வெள்ள பாதிப்பு, மீட்புப்பணிகள் பற்றி  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். 

ராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், உதவிகள் தேவைப்பட்டால் அவர் என்னிடம் தொடர்பு கொள்வதாக தெரிவித்துள்ளார்.  கேரளாவுக்கு தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.