தேசிய செய்திகள்

எத்தனால் மூலம் இந்தியா ரூ.12 ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கும் -பிரதமர் மோடி + "||" + Ethanol output will save India ₹12,000 cr.: Modi

எத்தனால் மூலம் இந்தியா ரூ.12 ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கும் -பிரதமர் மோடி

எத்தனால் மூலம் இந்தியா ரூ.12 ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கும் -பிரதமர் மோடி
எத்தனால் மூலம் இந்தியா ரூ 12 ஆயிரம் கோடி இறக்குமதி சேமிக்கப்பட்டு உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார். #PMModi
புதுடெல்லி

உலக உயிரி எரிபொருள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

அனைத்து வேளாண் கழிவுகளையும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும்.  குப்பைகளில் இருந்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலை 2022க்குள் 10 சதவீதமும், 2030க்குள் 20 சதவீதமும் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எத்தனால் கலப்பு திட்டத்தை  முந்தைய அரசாங்கங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அதன் உற்பத்தி  141 கோடி லிட்டர் அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும். ரூ 12,000 கோடி  இறக்குமதியை சேமிக்கும்.

எத்தனால் மூலம் உயிரி எரிபொருள் தயாரிக்கவும் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஆலைகள் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்டுக்குப் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய், எரிவாயு இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வாஜ்பாய் அரசாங்கத்தின் போது எத்தனோல் கலத்தல் திட்டம் தொடங்கப்பட்டது.ஆனால் முந்தைய அரசாங்கங்கள் எத்தனால் திட்டத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. என கூறினார்.