மாநில செய்திகள்

விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு + "||" + Karunanidhi will be installed the entire bronze statue Thirunavukkarasar

விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு

விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் -திருநாவுக்கரசர் அறிவிப்பு
விரைவில் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
சென்னை,

முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பெரிய அளவில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது. 

நேற்று முன்தினம் இரவு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, விடிய விடிய தொண்டர்கள் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று 3-வது நாளாக  காலையிலிருந்தே தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கருணாநிதியின் நினைவிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எனது குடும்பம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில் விரைவில் வெண்கல சிலை நிறுவப்படும்.  மத்திய அரசு பாரத ரத்னா விருதும், தமிழக அரசு சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்டவும் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கைவிடுத்துள்ளார்.