தேசிய செய்திகள்

ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல் + "||" + 82 Tmc in July More water is opened- Karnataka Information on Cauvery Water Organizing Committee meeting

ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்

ஜூலையில் 82 டி.எம்.சி. கூடுதலாக நீர் திறக்கப்பட்டு உள்ளது- காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கர்நாடகம் தகவல்
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
புதுடெல்லி

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று 3-வது கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கையில் கர்நாடக நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் 140 டி.எம்.சி. நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கர்நாடகம் திறந்து விட்ட நீர், தமிழகத்துக்கு ஜூலை மாதம் தரவேண்டிய 58 டி.எம்.சி.விட 82 டி.எம்.சி. அதிகம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக மழை பெய்த காரணத்தினால் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கர்நாடகம் தாக்கல் செய்த அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், அதன் பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தை கலந்து பேசி காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத் தேதி வெளியாகும் என்றும்  கூறப்படுகிறது. 

இதனிடையே அடுத்தக் கூட்டம் செப்டம்பர் இரண்டாவது வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.