தேசிய செய்திகள்

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் -ராகுல்காந்தி + "||" + What happened to women in last 4 yrs never happened in even 3000 yrs: R Gandhi

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் -ராகுல்காந்தி

பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் -ராகுல்காந்தி
கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். #RahulGandhi
ராய்ப்பூர்,

ராய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

உத்தர பிரதேசம், பீகாரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பான சம்பவம்  எழுந்த போது  இது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 

 இது உங்களுடைய கேள்வி மட்டும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களிடம் இருந்து எழுந்த கேள்வி ஆகும்.  பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினார். கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை. 

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவரது  பெயர் பனாமா ஆவணங்களில் வந்தபோது  அதில் அவர்  குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால்   சத்தீஸ்கரில் உங்கள் முதல்-மந்திரியின் மகனின் பெயர் பனாமா ஆவணங்களில் வரும் போது, விசாரணை கூட ஆரம்பிக்கவில்லை.  இது தான் பிஜேபி-என்.டி.ஏ யின் 'சௌகித்தாரி' எனக்கூறினார்.