உலக செய்திகள்

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு + "||" + Two police officers among 4 killed in Canada shooting, say authorities

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழப்பு
கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரு போலீசார் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.


மாண்ட்ரீல், 


கனடாவின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண தலைநகரான பிரடெரிக்டன் நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்புக்கான அறிவுரைகளை வழங்கினர். யாரையும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்த அவர்கள், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்கும் பணியிலும் இறங்கினர். இதன் பயனாக அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.

 அவரிடம் விசாரணையை தொடங்கி உள்ள அதிகாரிகள், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கனடாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவை காட்டிலும் கனடாவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டம் கடுமையாக உள்ளது, இருப்பினும் அங்கு சமீப காலமாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி; 12 பேர் காயம்
பிரான்சில் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் 3 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளார்.
2. பிரேசிலில் சர்ச்சில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
பிரேசில் நாட்டில் சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகினர்.
3. கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்
கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
4. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் படை துப்பாக்கி சூடு; ராணுவ வீரர் மரணம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
5. கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழப்பு
கலிபோர்னியாவில் இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.