கிரிக்கெட்

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி + "||" + TNPL Cricket: Madurai Panthers win the match against Kings XI

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரைபாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018
திண்டுக்கல்,

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் திண்டுக்கல்லில் நடைபெற்ற 2வது குவாலிபையர் ஆட்டத்தில் மதுரைபாந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முடிவில் கோவை கிங்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் வெங்கடராமன் 45 ரன்களும்,  பிரசாந்த் ராஜேஷ் 29 ரன்களும் எடுத்தனர். மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணியின் சார்பில் அருண் கார்த்திக், ராஹிஜா ஆகியோர் களமிறங்கினர். இதில் ராஹிஜா 8(8) ரன்னிலும், அடுத்து களமிறங்கிய தலைவன் சற்குணம் 5(5) ரன்னிலும், கேப்டன் ரோகித் 30(37) ரன்னிலும் வெளியேறினர். முடிவில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அருண் கார்த்திக் 79(56) ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 7(4) ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் மதுரை பாந்தர்ஸ் அணி 18.2  ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.. 


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018
3. டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிபெற்றது. #TNPL2018
4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 181 ரன்களை வெற்றி இலக்காக திருச்சி அணி நிர்ணயித்துள்ளது. #TNPL
5. டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018