தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை + "||" + Prime Minister Narendra Modi's Speech at Rajya Sabha - Venkaiah Naidu's action

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை

மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் - வெங்கையா நாயுடு நடவடிக்கை
மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சு சபைக் குறிப்பில் இருந்து நீக்கம் செய்து வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.கே. ஹரிபிரசாத் தோல்வி கண்டார்.


இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி விமர்சித்து பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலிப்பதாக கூறிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் கருத்தை சபைக் குறிப்பில் இருந்து நீக்கும்படி நேற்று உத்தரவிட்டார். இதேபோல் புதிய துணைத் தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அதவாலே பேசியதும் சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதுபற்றி ஹரிபிரசாத் கூறும்போது, ‘‘சபையின் கண்ணியத்தை குறைக்கும் விதமாக பிரதமர் சபையில் பேசியது துரதிர்ஷ்டவசமான ஒன்று’’ எனக் குறிப்பிட்டார்.

பொதுவாக நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு அபூர்வமாக எப்போதாவதுதான் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.