உலக செய்திகள்

சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்; பொதுமக்களில் 30 பேர் பலி + "||" + Nearly 30 civilians dead in heavy bombing on north Syria: monitor

சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்; பொதுமக்களில் 30 பேர் பலி

சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்; பொதுமக்களில் 30 பேர் பலி
சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது நடந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பெய்ரூட்,

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே உள்ள கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இதனை இலக்காக கொண்டு, தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் பஷார் அல் ஆசாத் எச்சரிக்கை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இப்பகுதிக்கு தென்மேற்கே கடந்த வியாழ கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  இதில் பொதுமக்களில் 11 பேர் பலியாகி உள்ளனர் என சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து தெற்கு பகுதியில் வான்வழியே ரஷ்ய போர் விமானங்களின் தாக்குதல் மற்றும் சிரிய ஹெலிகாப்டர்களின் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சில மணிநேரங்களுக்கு பின் அலெப்போ பகுதிக்கு அருகே கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதி மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் 3 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர்.  20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் சிரியாவின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் மீது நடந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க ஏதுவாக புகார் பெட்டி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
2. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பூர் 52–வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் நடைபாதையில் மண் சரிவு; பொதுமக்கள் அவதி
ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
4. வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை; துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
ஊத்துக்கோட்டையில் நடந்த போலீஸ்–பொதுமக்கள் நல்லுறவு விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
5. பர்கூர் மலைப்பகுதியில் விடிய–விடிய மழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; குட்டைகள் நிரம்பின
அந்தியூர் மலைப்பகுதியில் விடிய–விடிய மழை பெய்ததில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் குட்டைகளும் நிரம்பின.