உலக செய்திகள்

அல்பேனியாவில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டு கொன்ற இளைஞர் + "||" + Man kills eight of his relatives in Albania

அல்பேனியாவில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டு கொன்ற இளைஞர்

அல்பேனியாவில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டு கொன்ற இளைஞர்
அல்பேனியா நாட்டில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை இளைஞர் ஒருவர் சுட்டு கொன்றுள்ளார்.
திரானா,

அல்பேனியா நாட்டின் திரானா நகரின் தெற்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் ரெசுலாஜ் என்ற கிராமம் உள்ளது.  இங்கு வசித்து வந்தவர் ரித்வான் ஜைகாஜ் (வயது 24).

இந்த நிலையில், ஜைகாஜ் தனது பெரிய மாமா மற்றும் அவரது மகன்கள் உள்பட உறவினர்கள் பலரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.  இந்த சம்பவத்தில் 9 வயது குழந்தை, டீன் ஏஜ் சிறுமி மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

இதனை அடுத்து அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார்.  ஜைகாஜின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ள காவல் துறையினர் இதுபற்றிய தகவல் எதுவும் தெரிய வருமெனில் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.  தொடர்ந்து அவர்கள், ஜைகாஜிடம் ஆயுதம் இருக்க கூடும் என்றும் அதனால் அவரை நெருங்கி விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

அவரது பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.  இந்த சம்பவத்திற்கான பின்னணி பற்றி தெளிவாக தெரியவரவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. செல்பி எடுத்த இளைஞருக்கு புதிய செல்போன் - சிவகுமார் வாங்கி கொடுத்தார்
சிவகுமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார்.
2. குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார்
காரைக்காலில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கேசவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
3. குழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்
இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
4. பாலில் விஷம் கலந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்ற தாய் நாகர்கோவிலில் கைது
சென்னையில் பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.
5. காரை ஓட்டிய இளைஞருக்கு மாரடைப்பு; உடனே செயலில் இறங்கி காப்பாற்றிய கான்ஸ்டபிளுக்கு பாராட்டு
மகாராஷ்டிராவில் காரை ஓட்டி சென்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய கான்ஸடபிளுக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன.