மாநில செய்திகள்

காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு செல்ல திருச்சி ஆட்சியர் உத்தரவு + "||" + Trichy Collector orders people to go to the safest areas

காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு செல்ல திருச்சி ஆட்சியர் உத்தரவு

காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு செல்ல திருச்சி ஆட்சியர் உத்தரவு
காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு செல்லும்படி திருச்சி ஆட்சியர் ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி,

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் மேட்டூர் அணை வேகமுடன் நிரம்பி வருகிறது.

இதேபோன்று அணையில் இருந்து நீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியில் இருந்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திருச்சி முக்கொம்பு அணைக்கு வந்து சேருகிறது.  முக்கொம்பு அணைக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்து சேரும் என கூறப்படும் நிலையில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி திருச்சி ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தி உள்ளார்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு மிக்க பகுதிகளுக்கு செல்லும்படி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசும் அறிவுறுத்தியுள்ளது.