மாநில செய்திகள்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது + "||" + 2nd phase of the study for MBBS, BDS started

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கியது.
சென்னை,

மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூலை 1ந் தேதி தொடங்கி, ஜூலை 7ந்தேதி நிறைவு பெற்றது.

முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவு, விளையாட்டு பிரிவு என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அதைத்தொடர்ந்து 2-ந்தேதி பொது கலந்தாய்வு நடந்தது.

முதல் 3 நாட்கள் நடைபெற்று முடிந்த மருத்துவ படிப்பு கலந்தாய்வில் முதல் நாளில் அரசு மருத்துவக்கல்லூரியில் 38 எம்.பி.பி.எஸ். இடங்களும், 2 பி.டி.எஸ். இடங்களும் நிரம்பின.

2-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 572 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி கல்லூரியில் ஒரு எம்.பி.பி.எஸ். இடம் என மொத்தம் 573 இடங்களும், 3-ந்தேதி அரசு மருத்துவக்கல்லூரியில் 719 எம்.பி.பி.எஸ். இடங்களும், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 29 இடங்களும், சுயநிதி கல்லூரியில் 59 இடங்களும் என மொத்தம் 807 இடங்கள் நிரம்பி இருக்கின்றன.

ஆக மொத்தம் 3 நாட்களில்(கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை) 1,418 எம்.பி.பி.எஸ். இடங்களும், 3 பி.டி.எஸ். இடங்களும் என 1,421 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு உள்ளன. இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 892 மாணவர்களுக்கும்(62.77 சதவீதம்), மத்திய அரசு பாடத்திட்டத்தில் படித்த 460 மாணவர்களுக்கும்(32.37 சதவீதம்), இதர பாடத்திட்டத்தில் படித்த 69 மாணவர்களுக்கும்(4.9 சதவீதம்) இடம் கிடைத்து இருந்தன.

முதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட மருத்துவ கலந்தாய்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 62 சதவீத மாணவர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது.

மொத்தம் 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,068 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 3 ஆயிரத்து 882 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நிரப்பப்படாத மீதமுள்ள 269 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்கியது.  இந்த கலந்தாய்வு வருகிற 13ந்தேதி வரை நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை