தேசிய செய்திகள்

கொல்கத்தா சென்றார் அமித் ஷா : திரிணாமூல் காங். போட்டி போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பு + "||" + Amit Shah Lands In Kolkata Today, Sets Up Face-Off With Mamata Banerjee

கொல்கத்தா சென்றார் அமித் ஷா : திரிணாமூல் காங். போட்டி போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பு

கொல்கத்தா சென்றார் அமித் ஷா : திரிணாமூல் காங். போட்டி போராட்டம் அறிவித்துள்ளதால் பரபரப்பு
பாஜக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக அமித்ஷா கொல்கத்தா சென்றுள்ளார். திரிணாமூல் காங். போட்டி போராட்டம் அறிவித்துள்ளதால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா, 

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் பாஜக-வின் பேரணி நடைபெறுகிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த பேரணி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் பேரணிக்கு முதலில் கொல்கத்தா போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்று அம்மாநில பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், பேரணி நடைபெற உள்ள இடத்தில் ‘மேற்கு வங்கத்துக்கு எதிரான பாஜக திரும்பி செல்’ என்ற எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ள பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று மாநில தழுவிய அளவில், ‘அசாம் குடிமக்கள் பதிவேடு’-க்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. அமித்ஷாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே, இந்த அனைத்து நடவடிக்கைகளையும் திரிணாமூல் முழு வீச்சில் செய்து வருவதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. 

இன்றைய போராட்டம் குறித்து பேசியுள்ள பாஜக, மற்ற மாவட்டங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு வரும் பாஜக-வினரை தடுக்கவே இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறாக இரு கட்சியினரும் தங்களுக்குள் மாறி மாறி வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளதால், மேற்கு வங்காள அரசியல் களத்தில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் குறித்து விமர்சித்துள்ள  மேற்கு வங்க பாஜக-வின் தலைவர் திலிப் கோஷ், ‘திரிணாமூல் காங்கிரஸின் இந்தப் போராட்டத்தால், இரு கட்சியினருக்கும் இடையில் மோதல் நடக்கும். அப்படி நடந்தால் அரசுதான் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.