தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் :ராகுல் காந்தி + "||" + My prayers -thoughts are with the people of Kerala in this difficult time : Rahul Gandhi

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் :ராகுல் காந்தி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் :ராகுல் காந்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மந்திரிகளுடன் சென்று  ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.  

கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து  டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள காங்கிரஸார் செய்ய வேண்டும்; கேரள மக்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. பிஎன்பி மோசடி குற்றவாளியிடம் இருந்து ஜெட்லி மகள் பணம் பெற்றுள்ளார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குற்றவாளியிடம் இருந்து அருண் ஜெட்லியின் மகள் பணம் பெற்றுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2. ரபேல் ஒப்பந்த சர்ச்சை: எச்ஏஎல் நிறுவன ஊழியர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
எச்ஏஎல் நிறுவன ஊழியர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
3. கர்நாடக முதல் மந்திரியுடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியை காங்.தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
4. நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராகுல் காந்தி கேள்வி
நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்சு செல்வது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
5. “என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்
“என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.