மாநில செய்திகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் + "||" + Stalin headed consultation meeting

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. #MKStalin #DMK
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் பதவி காலியாக உள்ளது.

புதிய தலைவர் யார்? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், தி.மு.க. தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் வரும் 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கட்சி தலைமை தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில்  கனிமொழி எம்.பி. ஆ.ராசா, டி.ஆர். பாலு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  வரும் 14 தேதி திமுகவின் அவசர செயற்குழு கூடவுள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.