தேசிய செய்திகள்

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்: நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க பினராயி விஜயன் அறிவுறுத்தல் + "||" + Pinarayi Vijayan instruction to all of the relief work

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்: நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க பினராயி விஜயன் அறிவுறுத்தல்

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத மழை, வெள்ளம்:  நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க பினராயி விஜயன் அறிவுறுத்தல்
நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். #KeralaFloods #keralarains

திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு மழையால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் 
கட்டமைப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும். நிவாரண பணிகளுக்கு அனைவரும் பங்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ.1 கோடி வழங்குவதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி அறிவித்துள்ளார்.  கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாக நாராயணசாமி கூறியுள்ளார்.