தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்: அமித்ஷா கடும் தாக்கு + "||" + Earlier we used to hear the sound of 'Rabindra Sangeet' everyday in Bengal but now you hear only the sound of bomb explosions here: BJP President Amit Shah

மம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்: அமித்ஷா கடும் தாக்கு

மம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்: அமித்ஷா கடும் தாக்கு
மம்தா பானர்ஜியை தேற்கடிக்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். #AmitShah
கொல்கத்தா, 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா கூறியதாவது:- “ மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்தில் வீழ்த்தவே நாங்கள் இங்கு வருகை தந்துள்ளோம்.  சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவே தேசிய மக்கள் பதிவேடு நடைமுறை கையாளப்படுகிறது. நாடு என்று வரும் போது வாக்கு வங்கி அரசியல் முக்கியம் இல்லை. உங்களால் முடிந்தவரை எதிர்த்துக்கொண்டு இருங்கள். ஆனால் ஒருபோது தேசிய மக்கள் பதிவேடு நடைமுறைகளை ஒருபோதும் கைவிட மாட்டோம். 

எங்கள் பேரணியை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்க்க கூடாது என்பதற்காக பெங்காலி தொலைகாட்சி சேனல்களின் சிக்னல்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளது. எங்களின் குரலை  நீங்கள் ஒடுக்க நினைத்தாலும், நாங்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவோம். மேற்கு வங்காளத்தில் முன்பு ரபீந்தர சங்கீதங்களை ஒவ்வொரு நாளும் கேட்க முடிந்தது. 

ஆனால், தற்போது வெடிகுண்டுகளின் சத்தத்தை மட்டுமே நம்மால் இங்கு கேட்க முடிகிறது. வங்காளதேச ஊடுருவல்காரர்களை  பாதுகாக்க மம்தா பானர்ஜி ஏன்  நினைக்கிறார். இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும் தனது நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கவில்லை. ஏனெனில், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறார்.

பெங்கால் போன்ற சிறந்த இடத்திற்காக மம்தா பானர்ஜி என்ன செய்து இருக்கிறார் என்று கவனியுங்கள்... வணிகமும், தொழிலும் நலிவடைந்துள்ளன. ஆனால், ஊழலும் முறைகேடும் அதிகரித்துள்ளன. சட்டத்தின் ஆட்சி இங்கு இல்லை. குண்டர்களின் ராஜ்ஜியம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் என்ன நடைபெற்றது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இலக்கியம் மற்றும் இசைக்கான நிலம்தான் பெங்கால். 

ஆனால், தற்போது  வெடிகுண்டு உற்பத்தி செய்யும் இடங்கள் பற்றியும் வெடிவிபத்துகள் பற்றிய செய்திகளை மட்டுமே நம்மால் கேட்க முடிகிறது. மம்தா பானர்ஜியின் மேற்கு வங்காளம் இதுதான்” இவ்வாறு அவர் அமித்ஷா தெரிவித்தார்.