மாநில செய்திகள்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு + "||" + Rahul Gandhi did not give proper protection - Thirunavukkarasar

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த  ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #RahulGandhi #Thirunavukkarasar
சென்னை,

முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.  

கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 

இந்தநிலையில்,  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு  கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.  ராஜாஜி அரங்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.