உலக செய்திகள்

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சித்துவுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார் இம்ரான் கான் + "||" + Imran calls up Sidhu, invites him to swearing-in ceremony

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சித்துவுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார் இம்ரான் கான்

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சித்துவுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார் இம்ரான் கான்
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு சித்துவுக்கு தொலைபேசி மூலமாக இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.
சண்டிகார்,

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற  பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீப் இ இன்சாப் கட்சி பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டு, இம்ரான் கானின் முக்கிய நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், கபில் தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுபோக தனது நெருங்கிய நண்பர்களை இம்ரான் கான் தொலைப்பேசி மூலமும் அழைப்பு விடுத்து வருகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு செல்போன் மூலம் அழைப்பு இம்ரான்கான்விடுத்துள்ளார். முன்னதாக அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது தனிப்பட்ட முறையில் இம்ரான் கான் செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.  இம்ரான்கானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் செல்ல விருப்பதாக தெரிவித்துள்ள சித்து, தனது முடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், மாநில முதல் மந்திரி அலுவலகத்திடம் தெரிவித்துவிட்டதாகவும் சித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 145 ரன்னில் சுருண்டது.
2. பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாம்: பாகிஸ்தான் சொல்கிறது
இந்தியா பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கி குவிப்பது தெற்காசியா அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
3. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி
பாகிஸ்தான் இடைத்தேர்தலில் அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றிபெற்றது. மேலும் நவாஸ் ஷெரீப் கட்சியும் எழுச்சி பெற்றுள்ளது.
4. பாகிஸ்தான்: இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி முன்னேற்றம்
பாகிஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
5. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.