தேசிய செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கட்சியினர் உதவ வேண்டும் ராகுல் காந்தி வேண்டுகோள் + "||" + I urge each and every Congres worker in Kerala to step up & help those in need Rahul Gandhi

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கட்சியினர் உதவ வேண்டும் ராகுல் காந்தி வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு  கட்சியினர் உதவ வேண்டும்  ராகுல் காந்தி வேண்டுகோள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு மாநில காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #RahulGandhi
புதுடெல்லி,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.  உணவு, உடை, மருந்துவவசதிகள் முகாம்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன் ஏராளமான வயல்களும் சேதம் அடைந்துள்ளது. மீட்புப்பணிகளில் முப்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளா வெள்ளம் பாதிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி  தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறியிருப்பதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையினால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை கைவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது . மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை  கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் என்னுடைய பிராத்தனைகளும், எண்ணங்களும் கேரள மக்களுடன் இருக்கும் 

இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.