தேசிய செய்திகள்

குழந்தைகள் மேம்பாடு அமைச்சக இணையதளத்துடன் 30 ஆயிரம் சிறுவர்–சிறுமிகளின் ஆதார் இணைப்பு + "||" + Atharar linkage of 30 thousand children and children with the Ministry of Child Development Ministry

குழந்தைகள் மேம்பாடு அமைச்சக இணையதளத்துடன் 30 ஆயிரம் சிறுவர்–சிறுமிகளின் ஆதார் இணைப்பு

குழந்தைகள் மேம்பாடு அமைச்சக இணையதளத்துடன் 30 ஆயிரம் சிறுவர்–சிறுமிகளின் ஆதார் இணைப்பு
குழந்தைகள் மேம்பாடு அமைச்சக இணையதளத்துடன் 30 ஆயிரம் சிறுவர்–சிறுமிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகத்தின் இணையதளத்தில் ‘குழந்தைகளை கண்காணியுங்கள்’ என்னும் தனிப்பகுதியும் (போர்ட்டல்) உள்ளது. இதனுடன் நாட்டில் உள்ள 9 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 2 லட்சத்து 61 ஆயிரத்து 566 சிறுவர்–சிறுமிகளின் ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் பணி நடந்து வருகிறது.


தற்போது வரை 30 ஆயிரத்து 835 சிறுவர்–சிறுமிகளின் ஆதார் இப்பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது. சிறுவர் பாதுகாப்பு இல்லங்கள், போலீஸ் இலாகா மற்றும் மாநில அரசுகளை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த இணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.

காணாமல் போகும் சிறுவர்–சிறுமிகளை அடையாளம் கண்டு துரித நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட பெற்றோருடன் உடனடி தொடர்பு கொள்ளவும் குழந்தைகளை கண்காணியுங்கள் பகுதியில் இதுபோல், ஆதார் இணைக்கப்படுவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.