மாநில செய்திகள்

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி + "||" + 25 lakh rupees relief aid for Kamal Haasan

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். #KeralaFloods2018
சென்னை,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள அரசுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் நிவாரண உதவி தொகையை வழங்கி உள்ளன. 

இந்தநிலையில்,  கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இளையராஜா விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்கள்
இளையராஜா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
2. ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் -கமல்ஹாசன்
ஊழலற்ற ஒருமித்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
3. இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் ஜோடி?
தமிழ் பட உலகின் `நம்பர்-1' நாயகி நயன்தாரா ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். கமல்ஹாசனுடன் மட்டும் அவர் இதுவரை ஜோடி சேரவில்லை.
4. மக்கள் நீதி மய்யம், தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் - இயக்குநர் அமீர்
மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நான் துணை நிற்பேன் என இயக்குநர் அமீர் கூறி உள்ளார். #MakkalNeedhiMaiam
5. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு
கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ‌ஷங்கர் டைரக்டு செய்கிறார்.