தேசிய செய்திகள்

தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை + "||" + Civil Aviation ministry okays water aerodrome proposal

தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை

தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை
தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவை தொடங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு கூறியுள்ளார். #wateraerodrome
புதுடெல்லி,

கடல் விமானம்’ என்பது நீரில் மிதந்தபடி பறந்து செல்லும் திறன் கொண்டது. அதுபோலவே தண்ணீரில் தரையிறங்கவும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வசதி கொண்டது. 

இந்தநிலையில் தண்ணீரில் மிதக்கும் கடல் விமான சேவையை இந்தியா முழுவதும் தொடங்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தண்ணீர் விமான நிலையங்களை அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துறை வகுத்துள்ளது. 

இது தொடர்பாக விமானப்போக்குவரத்துறை மந்திரி சுரேஷ் பிரபு  டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கடல் விமானங்கள் சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதோடு அவற்றுடன் ஆன்மீக தலங்களையும் இணைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதல் கடல் விமான நிலையம் ஒடிசாவின் சில்கா ஏரியிலும் அதைத்தொடர்ந்து குஜராத் சபர்மதி ஆறு, சர்தார் சரோவர் அணையில் அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.