மாநில செய்திகள்

காவிரியில் வெள்ளப்பெருக்கு: காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை + "||" + Flooding in Cauvery Uthayakumar warns

காவிரியில் வெள்ளப்பெருக்கு: காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

காவிரியில் வெள்ளப்பெருக்கு: காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கைவிடுத்துள்ளார். #CauveryWater
சென்னை,

கடந்த மாதம் பெய்த பருவமழையின் போது ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த இருவாரங்களுக்கு பிறகு, மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் ஏற்கனவே நிரம்பிய, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த 2 அணைகளில் இருந்தும் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.27 லட்சம் கனஅடியாக உள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 1,43,436 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

காவிரி கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர், 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்கு, அவசர தொலைபேசி எண்கள் 1077, 1070-யை தொடர்பு கொள்ளலாம்.காவிரி வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.