மாநில செய்திகள்

கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார் + "||" + Karunanidhi can not even think of the politics of Tamil Nadu

கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார்

கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார்
திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். #RadhikaSarathkumar #Karunanidhi
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.  

கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்றும் தொடர்ந்து பலரும் வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் திரண்டு வந்து சமாதியில் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சிலர் குழுவாகவும், தனியாகவும் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சமாதிக்கு ஏராளமானவர்கள் வருவதால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், நடிகை ராதிகா திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற ராதிகா, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அனைவரது மனதிலும் தமிழர் என் உணர்வை ஆழமாக விதைத்தவர் கருணாநிதி எனவும் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை