தேசிய செய்திகள்

கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் உறுதி - பினராயி விஜயன் + "||" + PM called us and said that any more help needed, will be provided to us: Kerala CM Pinarayi Vijayan

கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் உறுதி - பினராயி விஜயன்

கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் உறுதி - பினராயி விஜயன்
கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #PinarayiVijayan #KeralaFloods2018
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ராணுவம், கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே இன்னும் 3 நாட்களுக்கு கனத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்தநிலையில், கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

மாநிலத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியார்களிடம் கூறியதாவது:

கேரளாவிற்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள உதவிகள் வழங்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்; கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேரை காணவில்லை அவர்களை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

ராணுவம்,மாநில காவல்துறை,பேரிடர் மீட்புப் படை ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள நிவாரண பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.