உலக செய்திகள்

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப்பாய்ந்தது 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலம் + "||" + launches ParkerSolarProbe - its mission to send a satellite closer to the Sun - from Cape Canaveral, Florida in the US

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப்பாய்ந்தது 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலம்

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப்பாய்ந்தது 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலம்
சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. #ParkerSolarProbe #NASA
வாஷிங்டன்,

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970 களில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் (Solar Wind)  தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை!

இந்த நிலையில் முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து வானத்தை நோக்கி சீறிப்பாய்ந்தது. இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணிக்கு இது விண்ணில் சீறிப்பாய்ந்தது. முன்னதாக  நேற்று (சனிக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விண்கலம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இது விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.

இதன் எடை 612 கிலோ. நீளம் 9 அடி, 10 இன்ச். 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை.

விண்கலம் செய்யும் வேலை

இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் (Solar Wind) எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். 

இதுகுறித்து விஞ்ஞானியான நிக்கி பாக்ஸ் கூறுகையில்

"சூரியனின் கொரோனா பகுதியை சென்றடைந்தவுடன் சுமார் ஏழு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றிவரவுள்ள இந்த விண்கலம்தான், மனிதன் படைத்த விண்கலங்களிலேயே மிகவும் வேகமானது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு 'பார்கர் சோலார் புரோப்' என பெயரிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பார்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா.