உலக செய்திகள்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 404 வீடுகள் மலையகத் தமிழர்களிடம் ஒப்படைப்பு + "||" + India hands over 1st lot of newly built houses to Indian-origin people in Sri Lanka

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 404 வீடுகள் மலையகத் தமிழர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 404 வீடுகள் மலையகத் தமிழர்களிடம் ஒப்படைப்பு
இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 404 வீடுகள் மலையகத் தமிழர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

கொழும்பு,


பிரதமர் மோடி கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை பயணம் மேற்கொண்ட போது,  இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் மலையகப் பகுதிகளுக்கு சென்றார். இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்துவைத்து அவர் பேசுகையில், ''மலையக மக்களின் வளர்ச்சிக்கு இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். மலையக தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும், நீங்கள் எதிர்கொண்ட சவால்களுக்கும் ஓளிமயமான எதிர்காலத்திற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்'' என்று கூறினார். 

இலங்கையில் பூண்டுலோயாவின் டன்சின் தோட்டத்தில் மகாத்மா காந்திபுரம் என்ற பெயரில் 404 வீடுகள் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. இந்த வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மகாத்மா காந்திபுரத்தில் நடந்தது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெற்ற விழாவில் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரஜித் சிங் சந்து, அந்நாட்டு அமைச்சர்கள் பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக, பெருந்தோட்ட நவீன் திசாநாயக்க, ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சியின் மூலம் கலந்துக்கொண்டு, வீடுகளை பயனாளர்களுக்கு வழங்கினார். 
 
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா உயறுதியளித்த வீடுகளில் இதுவரையிலும் 47,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளில் பயனாளிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றவதை அறிந்து மகிழ்வுற்றேன். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டு மலையக தமிழர்களிடம் அறிவித்த மேலும் 10 ஆயிரம் கட்டுவதற்கான உடன்படிக்கையில் இன்று இந்தியாவும் இலங்கையும் கையோப்பமிட்டுள்ளன. இலங்கை தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். 

இந்தியா தன்னுடைய அண்டைய நாடுகளுக்கான கொள்கையில் ஒரு சிறப்பான இடத்தில் இலங்கையை வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு இலங்கை சிறப்பான நாடாகும், அப்படியே இருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.