தேசிய செய்திகள்

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம் + "||" + Modi government to buy 18 bullet trains from Japan for Rs 7,000 crore: Report

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம்

மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில்  ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க திட்டம்
மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடியில் ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரெயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி

ரூ.7 ஆயிரம் கோடியில்  ஜப்பானில் இருந்து 18 புல்லட் ரெயில்களை வாங்க  மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என எக்கனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. . மேலும் உள்ளூர் உற்பத்திக்கான தொழில்நுட்பத்தை மாற்றுவதில் புல்லட் ரெயில் ஒப்பந்தமும் அடங்கும்.

ஜப்பானில் இருந்து 18 ஷிங்கன்சன் ரெயில் பெட்டிகளை நாங்கள்வாங்க உள்ளோம் , "என  மத்திய அரசு அதிகாரி  ஒருவர் எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு  தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புல்லட் ரெயிலுக்கும் 10 பெட்டிகள் இருப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய புல்லட் ரெயில்கள் உலகிலேயே மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தன்னியக்க பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

பொது தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையில் இந்திய ரெயில்வே இந்தியாவில் ஒரு புல்லட் ரெயிலைக் ஒருங்கிணைக்கும் வசதியை அமைக்கும் பணியை தொடங்கி விட்டது என தெரிவிக்கபட்டு உள்ளது. கவாசாகி மற்றும் ஹிட்டாச்சி போன்ற ஜப்பானிய ரயில் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டில் வசதிகளை ஏற்படுத்தும் என அதில் அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
2. மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது
செப்டம்பர் மாதம் முதல் ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு பிரான்ஸ் வழங்குகிறது என விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
4. 2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன - வாட்ஸ் அப் பகீர் தகவல்
2019 தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள்தான் போலி செய்திகளை பரப்புகின்றன என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
5. ரூ.1 லட்சம் கோடி அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை கோரியது அரசு
நடப்பு நிதியாண்டில் ரூ.1.98 டிரில்லியன் அளவிலான மொத்த கூடுதல் செலவினத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதலை மத்திய அரசு கோரியுள்ளது.