தேசிய செய்திகள்

எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க யோகி அரசு முடிவு + "||" + Free education from KG to PG in Uttar Pradesh, Yogi government's next plan

எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க யோகி அரசு முடிவு

எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு  வரை இலவச கல்வி வழங்க யோகி அரசு முடிவு
உத்தர பிரதேசத்தில் யுகேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் மகாத்மா ஜோதிபா ப்யூல் ரோகில்காந்த் பல்கலை பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:

முதல்கட்டமாக அடுத்த கல்வியாண்டு முதல் முக்கிய நகரங்களில் ஆரம்ப கல்வி முதல் பட்ட  மேற்படிப்பு வரை  இலவசமாக கல்வி வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.  மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை இந்த மாதத்தில் வெளியிடப்படும்.   

மேலும் ஜிஎஸ்டி தொடர்பான படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் கொண்டு வரப்படும் என்றும், ஜிஎஸ்டி படிப்பு முறையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனத்தெரிவித்தார்.