உலக செய்திகள்

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு + "||" + The deadliest landslide in Ethiopia - 12 deaths

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
ஆடிஸ் அபாபா,

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தென் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

எஸ்.என்.என்.பி மாகாணத்தில் தாவ்ரோ மண்டலத்தில் 3 வீடுகள் தரை மட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. எஞ்சிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு எத்தியோப்பிய தலைநகர் ஆடிஸ் அபாபாவில் மலை போன்ற குப்பைக்கிடங்கில் நிலச்சரிவு ஏற்பட்டபோது 115 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.



தொடர்புடைய செய்திகள்

1. மூணாறு-போடி இடையே நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு
மூணாறு-போடி சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
2. காஷ்மீரில் நிலச்சரிவு: சிறுமி உள்பட 6 பேர் பலி
காஷ்மீரில் நிலச்சரிவில் வாகனம் சிக்கிய விபத்தில், சிறுமி உள்பட 6 பேர் பலியாயினர்.
3. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
4. கேரளாவில் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 24 பேர் சாவு
கேரளாவில் கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் இறந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு: 10 பேர் பலி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.