தேசிய செய்திகள்

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு + "||" + Section 377 Verdict By Supreme Court Today: 10-Point Guide

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

ஓரினச்சேர்க்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
ஓரினச்சேர்க்கையை குற்றமாக்குவதை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
புதுடெல்லி, 

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றமாக கூறுகிறது. இயற்கைக்கு மாறாக சேர்க்கையில் ஈடுபட்டால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை வழங்கும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நிறைவு
பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்.
2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
3. தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
4. கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கும் விவகாரம்: சி.பி.ஐ. மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க் கிழமை) விசாரணைக்கு வருகிறது.
5. இந்துக்களின் உணர்வுகளை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை: ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது
சபரிமலை விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.