மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம் + "||" + Apollo Arumugasamy inquiry Commission condemns

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ArumugasamyCommission
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணைத்திற்கு அப்போலோ நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக  அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்போலோ  குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள போதும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  விசாரணைக்கு ஆறு பேர் ஆஜராக வேண்டும் . அப்போலோ  மருத்துவர்கள் ஆஜராக வேண்டிய தேதியில் ஆஜராக தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி ஆணையம் 29ம் தேதி விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி அப்போலோவில் நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. #Apollo #Arumugassamy #Jayalalitha
2. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
3. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகள், மருமகன் ஆஜராகி வாக்குமூலம்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரனின் மகள் டாக்டர் ராஜ் மாதங்கி, மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
4. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். #Jayalalithaa #Deepak
5. தனக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் குறித்து ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு
தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பது போல் எனக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது என ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது. #Jayalalithaa #JayalalithaaDeath