தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோகி ஆதித்யநாத் ஆய்வு + "||" + UP CM Yogi Adityanath conducted aerial survey earlier today to take stock of the situation of the flood affected areas in Basti district

உத்தர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோகி ஆதித்யநாத் ஆய்வு

உத்தர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோகி ஆதித்யநாத் ஆய்வு
உத்தர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யோகி ஆதித்யநாத் ஆய்வு மேற்கொண்டார். #YogiAdityanath
லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
பலத்த மழை பெய்து வருவதால் கான்பூரிலுள்ள கங்கை ஆற்றில் அபாயகட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக அந்த மாநிலத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில், பாஸ்டி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.