தேசிய செய்திகள்

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி + "||" + Militant killed, policeman injured in attack on police picket in JK

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி

காஷ்மீரில் காவல் துறை மீது துப்பாக்கி சூடு; பதிலடியில் தீவிரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மீது நடந்த துப்பாக்கி சூடுக்கு பதிலடியாக தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு அவர்கள் மீது தீவிரவாதிகள் சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.  இந்த சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  அவனிடம் இருந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிரவாதியின் அடையாளம் மற்றும் எந்த குழுவை சேர்ந்தவன் ஆகியவை பற்றி போலீசார் உறுதியான தகவலை வெளியிடவில்லை.  இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவரும் காயமடைந்து உள்ளார்.  அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் நலமுடன் உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் துப்பாக்கி சூடு: 10 பேர் பலி
பிரேசில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் உட்பட 10 பேர் பலியாகினர்.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்
காஷ்மீரின் வடக்கே இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
3. ரஜவுரி பகுதியில் பிற்பகல் 2.15 மணிக்கு அத்துமீறிய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி
ரஜவுரி பகுதியில் பிற்பகல் 2.15 மணிக்கு அத்துமீறிய பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து உள்ளது.
4. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை இல்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
5. காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு; பாதுகாப்பு படை பதிலடி
காஷ்மீரில் இன்று காலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.