மாநில செய்திகள்

அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை -தம்பிதுரை + "||" + Because the news about the illusory rally will not come out Minister, officials checked in homes - thambidurai

அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை -தம்பிதுரை

அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை -தம்பிதுரை
அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
திருச்சி

திருச்சி வந்த தம்பிதுரை அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மக்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தருகிறார்கள். அதிகாரிகளும் மக்களின் குறைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றமே நல்ல தீர்ப்பை தந்துள்ளது.  நல்ல தீர்வு அம்மாவின் அரசு எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.  நாங்கள் அர்களை வரவேற்கிறோம்.

குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் இருக்கும்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம். இப்போது அவர் கூறுவது சரியானதா முறையா என்று எனக்குத் தெரியவில்லை.

அரசில் உள்ள எந்த ஒரு அமைச்சர்களும் பொறுப்பாளர்களும் ஒரு தவறும் செய்யவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகிறது.

அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளம் அமைச்சர் மீது  வேண்டும் என்று சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற செய்கிறார்கள், இது எல்லாம் சரியாக தெரியவில்லை.

திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலினுக்கு மறைமுகமாக பாஜக உதவி செய்து கொண்டிருக்கிறது. உண்மையான கூட்டணியே அவர்களுக்கு இடையேதான், எங்களிடம் இல்லை.

எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுக சந்திக்க உள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் தம்பிதுரை பேட்டி
‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும் என தம்பிதுரை கூறினார்.
2. தமிழகத்திற்கு நிதி தராததால் நலத்திட்டங்கள் முடக்கம் மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு நிதி தராததால் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது தம்பிதுரை குற்றம் சாட்டினார்.
3. சந்திரபாபு நாயுடு–ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் மணப்பாறையில் தம்பிதுரை பேட்டி
சந்திரபாபு நாயுடு–ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாடகம் என்று மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தம்பிதுரை கூறினார்.
4. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை தம்பிதுரை பேட்டி
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
5. தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது தம்பிதுரை பேட்டி
தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று தம்பிதுரை கூறினார்.